வேலூரில் படவேட்டம்மன் தேர் திருவிழா பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். வேலூர் மாவட்டம் வேலப்பாடியில் பழமை வாய்ந்த அருள்மிகு படவேட்டம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மாசி மற்றும் பங்குனி மாதத்தில் கூழ்வார்த்து பொங்கல் வைத்து, தேர்த் திருவிழாவானது நடைபெற்றது. அலங்கரிக்கப்பட் தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வீதி உலா வந்தன. தேரில் படவேட்டம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்கள். தேரில் மாவு விளக்கு ஏற்றி, அம்மனுக்கு சூடம் காட்டியும், மிளகு, உப்பு ஆகியவற்றை தேரின் மீது தூவி பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.