பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொது இடங்களில் மது அருந்துபவர்களை தடுக்க அவ்வப்போது ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மது அருந்தும் நபர்களால் தொந்தரவு ஏற்பட்டால் பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண், மின்னஞ்சல், வாட்ஸ்அப் எண் ஆகியவற்றை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.