நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 17 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில், 5 மருத்துவர்கள் மட்டுமே இருப்பதால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் காத்திருக்க வேண்டியதோடு, வேறு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.