ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாதாள காளியம்மன் புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் 108 பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நரசிங்கம்பட்டி கிராமத்தில் உள்ள பாதாள காளியம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் மற்றும் முளைப்பாரி உற்சவ விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி முக்கிய நிகழ்வாக 108 பால்குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக வந்த பால்குடம் ஆலயத்தை வந்தடைய அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.