ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆன்மீக விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது. சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழா 28 ஆம் தேதி ஆன்மீக விழாவாகவும், 29 ஆம் தேதி அரசியல் விழாவாகவும், 30 ஆம் தேதி அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற ஆன்மீக விழாவில் தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் பங்கேற்று, யாகசாலை அமைத்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.