நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே மானிய மண்ணெண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இடிந்தகரை மீனவர் கிராமத்தில், அரசு வழங்கும் 300 லிட்டர் மானிய மண்ணெண்ணெயை, கூட்டுறவு சங்கம் மூலம் ஊர் நலக்குழுவினர் விநியோகம் செய்தனர். மேலத்தெருவை சேர்ந்த தாமஸ், கூடுதல் மண்ணெண்ணெய் கேட்ட நிலையில், ஊர் நலக்குழுவினர் தர மறுத்தனர். ஆத்திரமடைந்த அவர், உறவினர்கள் 9 பேருடன் சேர்ந்து கீழத்தெருவை சேர்ந்த முருகேசன், மதன், ஆல்வின், ரெக்ஸ் ஆகியோரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.