நெல்லை மாவட்டம் பர்கிட் பகுதியை சேர்ந்த மாணவர் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த கோரி பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் 4ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவன் விக்னேஷ், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், உடல் முழுவதும் காயம் இருந்ததாக கூறப்படுகிறது.