தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், மாணவர்களை சாதிப் பெயரை சொல்லி சாடுவதாகவும் புகார் தெரிவித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். புட்டிரெட்டிப்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மேலாண்மை குழு கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள், பள்ளியில் வெட்டப்பட்ட மரங்களை விற்பனை செய்தது குறித்து ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பிய நிலையில், வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் ,நேரில் சென்று விசாரணை நடத்தி மனுவை பெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி தெரிவித்தார்.இதையும் படியுங்கள் :உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு அணையிலிருந்து விநாடிக்கு 6,950 கன அடி நீர் வெளியேற்றம்..!