ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பான்டுகுடி பகுதியில் இருந்து மங்கலகுடி பகுதியை இணைக்கும் சாலையை சீரமைக்கும் பணிகள் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் சாலையில் இருந்த நான்கு பாலங்கள் உடைக்கப்பட்டு பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சாலையில் ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் இருப்பதால் அச்சமடைந்த பெற்றோர்கள் சாலை சீரமைக்கப்படும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என்று தெரிவித்தனர்.