கழிவுநீர் வடிகால் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, ராணுவ வீரர்களின் பெற்றோர் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். குலசேகரப்பட்டியை சேர்ந்த துரை - செல்வி தம்பதியின் மகன்கள் இருவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மனு அளித்தனர். அந்த மனுவில், கீழத்தெருவில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வடிகாலை சிலர் ஆக்கிரமித்துள்ளதால், கழிவுநீர் செல்ல வழியின்றி தெருவின் மத்தியில் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாகவும், ஆனால், அதிகாரிகள் துணையோடு சுதா என்பவர் மீண்டும் ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.இதையும் படியுங்கள் : ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை முயற்சி 2-ஆவது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி பெண் விபரீத முடிவு