திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இடத் தகராறில், தாக்கப்பட்ட திமுக கவுன்சிலரின் அண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிலத்தை அளவீடு செய்வது தொடர்பாக நாகராஜ் என்பவருக்கும் பழனிசாமி என்பவருக்கும் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிலத்திற்கு வேலி போடுவதை நாகராஜ் தடுத்த போது, அவரை பழனிசாமி தரப்பினர் கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாகராஜ் தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.