பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் மற்றும் வீராங்கனை ஷீத்தல் தேவி ஆகிய இருவருக்கும் வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை வானகரத்தில் உள்ள வேலம்மாள் பள்ளிக்கு மாரிப்பனையும், ஷீத்தல்தேவியையும் சாரட் வண்டியில் அமரவைத்து ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, கிரேன் மூலம் அவர்களுக்கு ரோஜா பூ மாலை அணிவிக்கப்பட்டும், பள்ளி நிர்வாகிகள் வீரர், வீராங்கணைக்கு பரிவட்டம் கட்டியும் வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து,மாணவ, மாணவிகள் மத்தியில் வில் அம்பு எய்தி ஷீத்தல் தேவி அசத்தினார்.