தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே பத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி கொடை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் சுந்தர மூர்த்தி விநாயகர் கோவிலில் இருந்து சிறப்பு பூஜை செய்யப்பட்ட புனித நீர் 108 பால்குடங்கள் மூலம் எடுத்து வரப்பட்டு பத்திரகாளியம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.