புதுக்கோட்டை உசிலங்குளம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் வழிபாடு செய்தனர்.புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட உசிலங்குளம் பகுதியில் 28 ஆம் ஆண்டு முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு காலையில் ஸ்ரீ கணபதி ஹோமம், நவசக்தி ஹோமம், நவகிரக ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அய்யனார் கோவிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பால்குடங்கள், காவடி, அலகு குத்தியும், கரும்புத் தொட்டில் கட்டியும் முக்கிய வீதிகள் வழியாக முத்துமாரியம்மன் ஆலயம் வரை சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.