ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா காப்பு கட்டி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. யானையுடன் மேள தாளங்கள் முழங்க அம்மன் கொடியை சிறிய பல்லக்கில் வைத்து பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தின் முன்பு அம்மன் கொடியை வைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை செய்தனர்.இதனை தொடர்ந்து, கொடி மரத்தில் அம்மன் கொடி ஏற்றப்பட்டதையடுத்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.