ஹேக் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்க உதவி செய்த ரசிகர்களுக்கு, தொலைக்காட்சி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் கதிர்வேல் நன்றி தெரிவித்துள்ளார். கதிர்வேலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 2 லட்சம் பேர் பின் தொடரும் நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இந்நிலையில், அவரது நண்பர்களும், ரசிகர்களும் கணக்கை மீட்க உதவி செய்தனர்.