கடலூர் மாவட்டம் அன்னதானம்பேட்டை கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கிராம பொதுமக்கள் கல்வி சீர் கொடுத்து நூற்றாண்டு விழாவை கொண்டாடினர்.நாடு சுதந்திரம் வாங்கிவதற்கு முன்பு தொடங்கப்பட்ட அரசு பள்ளிக்கு பொதுமக்கள் நோட்டு, பேனா, பென்சில், உள்ளிட்டவைகளும், பள்ளிக்கு கம்யூட்டர் டேபிள், ஸ்டீல் பிரோ, நாற்காலி, புராஜக்டர், உள்ளிட்ட ஒரு இலட்சம் மதிப்பிலான பொருட்களையும் வழங்கினர்.