பணியிட மாறுதல் : இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்கள் முன்பு ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மீண்டும் ஒரு பணியிட மாறுதலை அறிவித்துள்ளார். இதில் கடந்த முறை பணியிட மாறுதல் செய்த கணேஷ்யை புத்தூர் பல்லவாளையம் ஊராட்சியில் இருந்து மீண்டும் புஞ்சை தளவாய்பாளையம் ஊராட்சிக்கு பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டது ஊராட்சி செயலாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் இடம் இவர்கள் முறையிட்டும் சரியான தீர்வு எட்டப்படத நிலையில் நேற்று முதல் ஊராட்சி செயலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் பகுதியில் ஊராட்சி சார்ந்த பணிகள் பாதிப்படைந்த உள்ளது குறிப்பிடத்தக்கது. Related Link விவசாயிகளுக்கு ஆதரவாக பாமகவினர் ஆர்ப்பாட்டம்