முறைகேடு புகாரில் சிக்கிய மல்லியம்பத்து ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. மக்களிடம் இருந்து வசூலித்த வரி பணம் 74 லட்சத்தை மோசடி செய்ததாக எழுந்த புகாரில் மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் விக்னேஷ்வரனை பதவியில் இருந்து நீக்கி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டார். அதை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து ஆட்சியர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.