மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற ஊராட்சி மன்ற தலைவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் பூம்பாறை ஊராட்சி மன்ற தலைவர் கோபால கிருஷ்ணன் , வீராபாண்டியை சேர்ந்த அவரது நண்பர் சங்கிலி வீட்டிற்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்றபோது இந்த சோக நிகழ்வு அரங்கேறியது.