கட்டுமானப் பணிக்கு பள்ளம் தோண்டிய போது, 10 பஞ்சலோக சிலைகள் கிடைத்துள்ளன. திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, நத்தம் மேடு பழைய அக்ரஹாரம் பகுதியில், கழிவுநீர் வாய்க்கால் கட்டுவதற்கு பள்ளம் தோண்டிய போது, சுமார் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சலோக சிலைகள் கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடராஜர், பெருமாள், விஷ்ணு, ஆஞ்சநேயர், விநாயகர் உள்ளிட்ட சிறிதும் பெரிதுமான 10 பஞ்சலோக சிலைகள் கிடைக்கப் பெற்றதையடுத்து பொதுமக்கள் அதனை பாதுகாப்பாக எடுத்து, அருகில் இருந்த கீற்று கொட்டகையில் வைத்தனர். இதுகுறித்து, தொட்டியம் தாசில்தார் செல்விக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் சிலைகளை நேரில் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளார்.