தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மாசிமக பெருவிழாவில் 5வது நாள் நிகழ்ச்சியாக ஓலை சப்பரத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வந்தனர். 15 நாதஸ்வரம் 15 தவில் கலைஞர்கள் கலந்துகொண்டு இசைக்கச்சேரியை அரங்கேற்றிய நிலையில் சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.