கொட்டும் மழையிலும், பெரியபாளையம் அருகே பனை விதைகளை விதைக்கும் நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார். திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம், கொசவன் பேட்டை ஊராட்சியில், ஆரணி ஆற்றின் கரையோர பகுதியில் அரசுத்துறைகள் சார்பில், பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது. திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப், இந்நிகழ்வை கொட்டும் மழையில் துவக்கி வைத்தார். ஏராளமான பெண்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பனை விதைகளை விதைத்தனர்.