நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தீமிதி திருவிழாவில் ஆறு மாத குழந்தையுடன் குண்டத்தில் இறங்கிய பக்தர் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவரங்காடு பகுதியில் உள்ள அக்னி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில், அப்பகுதியை சேர்ந்த குமார் என்பவர், தனது ஆறு மாத பெண் குழந்தையுடன் தீ குண்டத்தில் இறங்கினார். அப்போது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அக்னி குண்டத்தில் மிக அருகிலேயே தன் குழந்தையுடன் கால் தடுமாறி கீழே விழுந்த நிலையில் அருகிலிருந்தவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.