தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டியில் முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து பழனி முருகன் கோயிலுக்கு வெள்ளி வேல் எடுத்து செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, முருக பக்தர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளி வேலை எடுத்து செல்ல, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மறுப்பதாக கூறப்படுகிறது.