திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தெப்பத்தேர் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. பழநி தேரடியில் உள்ள தெப்பக்குளத்தில் வள்ளி, தெய்வானை சமேதராய் அருள்மிகு முத்துக்குமார சாமி, தெப்பத்தேரில் எழுந்தருளி தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் தைப்பூச பெருவிழா நிறைவடைந்தது.