பழனி முருகன் கோயில் உண்டியல்கள் மூலம் மூன்று கோடியே 43லட்சத்து 23ஆயிரம் ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. 33 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையால் உண்டியல்கள் நிரம்பி வழிந்தன. இதனையடுத்து அவை திறக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டதில், 627 கிராம் தங்கமும், 18ஆயிரத்து 80 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன.