தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் நகராத்தார் சர்க்கரை காவடிகள், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவடி மடத்தை வந்தடைந்தன. அதிகாலையில் மகேஸ்வர பூஜை செய்யப்பட்டு, பக்தர்கள் முன்னிலையில் காவடி சிந்து பாடப்பட்டு ஆட்டம் பாட்டத்துடன் காவடிகள் பழனியை நோக்கி புறப்பட்டன.