விழுப்புரம் மாவட்டம் கந்தாடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே முட்புதரில் பெயிண்டர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு பகுதியை சேர்ந்த ஜெயசீலன் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில், அவரது சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.