பத்மஸ்ரீ விருது பெற்ற இயற்கை விவசாயியான கோவையைச் சேர்ந்த பாப்பம்மாள் பாட்டி உடல் நலக்குறைவால் தனது 109வது வயதில் காலமானார். 17ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பாப்பம்மாள் பாட்டிக்கு பெரியார் விருதினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவித்திருந்தார்.