கடந்த ஆண்டை விட, நடப்பு ஆண்டில் 3 மடங்கு அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். திண்டுக்கல்லில் பேட்டியளித்த அவர், திமுக ஆட்சியில்தான் அதிகபட்சமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக கூறினார். அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில், 1 கோடியே 79 லட்சத்து 81 ஆயிரத்து 152 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், ஆனால், திமுக அரசின் 54 மாத ஆட்சியில், 1 கோடியே 96 லட்சத்து 37 ஆயிரத்து 499 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். நெல் கொள்முதல் விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தவறான தகவல்களை கூறி வருவதாக புகார் கூறினார்.