கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி அருகே பெண்ணாடம் மற்றும் கோனூரில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தாழ்வான பகுதியில் நேரடி கொள்முதல் நிலையங்கள் உள்ளதால் மழைநீர் தேங்கி நெல் மூட்டைகள் சேதம் அடைந்ததாக கூறிய விவசாயிகள், ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.