தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராகவிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் 250 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிற்கள் மழைநீரில் சாய்ந்தன. ஏக்கருக்கு 30,000 ரூபாய் வரை செலவு செய்தும் பயனில்லை என கூறிய விவசாயிகள் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.