திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட 10 கோடி ரூபாய் குறைவாக பயிர் காப்பீடு தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.திருவாரூர் மாவட்டத்தில் 2023-2024 ஆம் ஆண்டில் நான்கரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்ட நிலையில், கன மழை காரணமாக சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது.இதையடுத்து, கணக்கெடுப்பு பணியில் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டனர்.இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் 72 வருவாய் கிராமங்கள் மட்டுமே பயிர் பாதிக்கப்பட்டதாக கணக்கிடப்பட்டதாகவும், 15 கோடியே 99 லட்சத்து 358 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.