மொத்தம் 20 பெட்டிகள் கொண்ட புதிய வந்தே பாரத் ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. நெல்லை - சென்னை வழித்தடத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ரயில், 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக கடந்த ஜனவரி மாதம் அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து, 20 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் எனக் கூறப்படும் நிலையில், தற்போது சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் இருந்து 20 பெட்டிகளை கொண்ட காவி நிற ரயில் திருநெல்வேலி ரயில் நிலையம் வந்து சேர்ந்துள்ளது. விரைவில் இந்த ரயில் திருநெல்வேலி சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.