ஊத்துக்கோட்டை அருகே நெடுஞ்சாலையில், குவியல் குவியலாக முளைத்து கிடக்கும் நெல் மணிகளால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழையை ஒட்டி கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி பகுதியில் தேர்வாய் சிப்காட் செல்லும் நெடுஞ்சாலையில் அறுவடை செய்த நெல்மணிகளை விவசாயிகள் குவியல் குவியலாக குவித்து வைத்துள்ளனர். அருகே அமைந்துள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை வாங்க தாமதம் செய்வதால், குவித்து வைப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இப்படி குவித்து வைக்கப்பட்ட நெல்மணிகள் தற்போது பெய்த கனமழையால் முளைத்து காணப்படுகிறது.இதனால், விவசாயிகள் மன வருத்தத்துடன் உள்ளனர். விவசாயிகளின் துயரை மாவட்ட நிர்வாகம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.