தஞ்சாவூர் மாவட்டம் காட்டூரில் செயல்பட்டு வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ள 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதால், ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலையின் குறுக்கே தடுப்புகளை அமைத்து மறியலில் ஈடுபட்டனர். நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் கொள்முதல் நடக்காததால், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த நெல்லை சாலை ஓரம் கொட்டி வைத்து காவல் காத்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்மணிகள் நனைந்து முளைக்க துவங்கிவிட்டன.