கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்க தொடங்கின. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தின் மூலமாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 7 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் எம்.ஆர்.கே. கூட்டுறவு ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டு வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.