திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த பேரிட்டிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வடதில்லை கிராமத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினர் மக்களுக்கான தொகுப்பு வீடுகள் தரமற்ற முறையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இது குறித்து கேள்வி எழுப்பினால் ஒப்பந்ததாரர் மிரட்டுவதாக பயனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.