சென்னை வண்டலூரில் அங்கன்வாடி மைய வளாகத்தில் எந்நேரமும் உடைந்து விழக்கூடிய நிலையில் ஆபத்தாக உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். சுமார் 30 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த தண்ணீர் தொட்டி, தற்போது தூண்களில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, உள்ளே உள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்து காணப்படுகிறது. அசம்பாவிதம் எதுவும் நிகழும் முன்பாக தண்ணீர் தொட்டியை அகற்ற வேண்டும் என அங்கன்வாடி மைய ஆசிரியர் கோரிக்கை வைத்துள்ளார்.