நாகை அருகே கீழ்வேளூர் அருகே கட்டப்பட்டு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.கருணாவெளி கிராமத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் குடிநீர் தேவைக்காக கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதனால், போதிய குடிநீர் கிடைக்காமல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.