திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தில் எருது விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. எருது விடும் திருவிழாவிற்காக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. தொடர்ந்து விழாவின் போது சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இருபுறமும் நின்று மக்கள் ரசித்தனர். இதனையடுத்து குறைவான நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை கடந்து சென்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 90,000 ரூபாயும் வழங்கப்பட்டது.