கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் இயற்கை பானங்களை நாடி வருகின்றனர்.தற்போதே பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் 102, 104 டிகிரி ஃபாரன்ஹீட்டாக அதிகரித்து வெப்பம் மக்களை வாட்டி வருகிறது.இந்நிலையில் கடும் கோடை வெயிலின் தாக்கத்தில் அதிகம் பாதிக்கப்படும் அரசுப்பேருந்து ஓட்டுனர்களை கோடை கால வெப்பத்தில் குளிர்விக்கும் வகையில் தஞ்சையில் தனியார் அறக்கட்டளை சார்பில் அரசுப்பேருந்து ஊழியர்களுக்கு இயற்கை குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.இதில் அவ்வழியாக சென்ற அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள், “வெளியே கோடை வெயில் சூடு, உள்ளே இஞ்சின் சூடு.. குளிர்ச்சியா ஜூஸ் குடிங்க பாஸ்” என்று கூறி வெயிலுக்கு இதமாக பாதாம்கீர் மற்றும் ரோஸ்மில்க் ஆகியவற்றை வழங்கியுள்ளனர்