மதுரை மாநகராட்சியின் தூய்மை பணி ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து காளவாசல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி தூய்மை பணி ஒப்பந்தத்தை மேற்கொண்டு வரும் அவர்லேண்ட் நிறுவனத்திடம், தூய்மை பணியாளர்கள் கூடுதல் பணிக்கான ஊதியத்தை கேட்ட போது, அந்நிறுவனம் இனி போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என்ற படிவத்தில் கையெழுத்திட நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் MEMO வழங்கப்பட்டதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் மாநகரில் குப்பைகள் தேக்கமடைந்து காணப்பட்டது.