எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவது எங்கள் கடமை என்று முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நெல்லையில், பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். இந்தக்கூட்டத்தில், தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசியதாவது:எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்களின் கடமை. அடுத்த ஆறு மாதங்கள் பூத் பொறுப்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.நம்முடைய 12 ஆண்டுகால ஆட்சியின் சாதனை, 4 ஆண்டு கால திமுக ஆட்சியின் வேதனை. இவை இரண்டையும் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.இந்த பொறுப்பானது தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். கட்சி பூத்தில் உள்ள தலைவர்கள், தொண்டர்கள் மட்டும் தான் இங்கு வந்திருக்கிறார்கள். பெரிய மாற்றம் வர உழைக்க வேண்டும். வரும் தேர்தலில் வெற்றி பெறும் வரை உழைக்க வேண்டும். முதல் மாநாடாக இந்த பூத் கமிட்டி மாநாடு நெல்லையில் நடைபெறுகிறது. இன்னும் 6 மாநாடு நடக்க உள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா வருவார்கள். எல்லாரும் கடுமையாக உழையுங்கள். ஒவ்வொரு வாக்கையும் சேகரித்து கொண்டு வாருங்கள். பெரிய மாற்றத்திற்கு பாடுபட வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.