சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.1,120 குறைந்துள்ளது.சென்னையில் கடந்த சில நாட்களாக, ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் மாறி மாறி நிலவி வருகின்றன. சில நாட்களில் இரு முறையும் உச்சத்தை எட்டும் தங்கத்தின் விலை, பிற தருணங்களில் இறங்கு முகமாக காணப்படுகிறது.இன்றைய தினம், அக்டோபர் 24ஆம் தேதி, காலையில் ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து காணப்பட்டது. ஆனால், மாலை நேர வர்த்தகத்தில் அதன் விலை குறைந்தது.ஒரு கிராமுக்கு ரூ.140 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,400 ஆக உள்ளது. ஒரு சவரன் ரூ.91,200க்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையை விட ஒரு சவரனுக்கு ரூ.800 குறைவாகும். சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.170 ஆக உள்ளது.