தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உடல் உறுப்பு தானம் செய்த மரக்கடை தொழிலாளியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த நயினாரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்ட நிலையில், அவரின் உடலுக்கு மாவட்ட வருவாய் அலுவலர், சாத்தான்குளம் தாசில்தார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.