புதுச்சேரி சட்டப்பேரவை அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் “சர்க்கிள் டி பாண்டிச்சேரி” மன்றத்தை காலி செய்ய மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மன்றம் 14 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருக்கும் வாடகை பாக்கியை பொறுப்பாளர்களிடம் இருந்து முழுமையாக வசூலிக்கவும், இடத்தை கையகப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.