கோவை மாவட்டம் பேரூர் தாலுகாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில் சட்டவிரோதமாக மண் எடுக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மண் திருட்டு குறித்த வீடியோ ஆதாரங்களுடன் வழக்கறிஞர் புருஷோத்தமன், நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் முறையிட்டார்.அப்போது மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.மண் எடுப்பதால் உருவாகும் குழிகளில் யானைகள் போன்ற விலங்குகள் விழும் அபாயம் உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோதமாக மண் எடுக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தவும், அதில் ஈடுபடுபவர்களை கைது செய்து, இயந்திரங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டனர்.