கோவில் நிலங்களை மீட்கவிடாமல் தடுக்கும் அதிகாரம் மிக்கவர்களின் பட்டியலை தாக்கல் செய்யும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை, நிலங்களை மீட்க 2 மாத கால அவகாசம் வழங்கியது. கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான 540 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் அவற்றை மீட்டு தரவேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்பிலுள்ள நிலங்களை மீட்க நீதிமன்றம் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.